தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியாக ஏறுமுகமாக உள்ளது. கடந்த 4ஆம் தேதி 8கிராம் கொண்ட ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.38,480க்கும், 5ஆம் தேதி ரூ.38,600ஆகவும் விற்கப்பட்டது. இதனையடுத்து நேற்று தங்கத்தின் விலை மேலும் அதிகரித்து ரூ.38,736ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில், இன்று தங்கம் சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.38,872க்கு விற்கப்படுகிறது. அதேபோல, ஒரு கிராம் ரூ.17 அதிகரித்து ரூ.4,859க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.71ஆக விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.71,000 ஆக விற்பனையாகிறது.