உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ளபோர் காரணமாக உலக பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, இதனால், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. மேலும் இதனால் பங்குசந்தைகளும் கடும் சரிவடைந்து வந்தது. இந்தவரிசையில், உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தின் மீது தங்களின் முதலீடுகளை மாற்றி வந்தனர். இதன் எதிரொலியாக, இந்தியாவில் தங்கத்தின் விலை மிக அதிமாக உயர்ந்தது. சென்னையில் கடந்த மாதம் ஏப்ரல் 18ஆம் தேதி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.50,470ஆக விற்பனையானது. எனினும், தற்போது கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை கனிசமாக குறைந்து வருகிறது. இந்தநிலையில், தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்து சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.59 குறைந்து ரூ.4787க்கும், 8 கிராம் கொண்ட ஒரு சவரனுக்கு ரூ.472 குறைந்து ரூ.38,296க்கும் விற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் சுத்தத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.64 குறைந்து சவரன் ரூ.5,222க்கும், 8 கிராம் ரூ.512 குறைந்து ரூ.41,776க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.30 பைசா குறைந்து ரூ.64.80க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,300 குறைந்து இன்று ரூ.64,800ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.