கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதற்காக பக்தர்கள் தரிசிக்க இலவச டோக்கன்களும் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் 4 நாட்கள் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டன. இதனால் பக்தர்கள் அவதியடைந்தனர். இதையடுத்து, நேற்று கவுண்டர் திறக்கப்பட்டு இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே இலவச தரிசன டிக்கெட் கவுண்டர்கள் மூடப்பட்டு அனைவரும் டோக்கன் வாங்காமல் நேரடியாக இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இனிமேல் முன்போல் இருந்தது போலவே டோக்கன் வாங்காமலேயே பக்தர்கள் இலவச தரிசனம் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.