டுவிட்டரில் உள்ள பல பயனர்கள் எடிட் வசதியை பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். டுவிட்டரில் டுவீட் செய்த பின்னர், அதாவது பதிவை வெளியிட்ட பின், அந்த பதிவை திருத்தி மாற்றம் செய்து பதிவிடும் புதிய வசதியை கேட்டுவந்தனர். எனவே, அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றி டுவிட்டர் நிர்வாகம் ஆய்வு செய்து வந்தது. இந்தநிலையில், அந்தநிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில், “வரும் ஆண்டு முதல், எடிட் (திருத்தம் செய்யும்) வசதியை கொண்டுவருவதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். வரும் மாதங்களில், ‘டுவிட்டர் ப்ளூ’ பயனாளர்களுக்கு இந்த வசதி முதலில் சோதனை முறையில் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளது. முன்னதாக எலான் மஸ்க் தனது டுவிட்டர் பதிவில் எடிட் வசதி வேண்டுமா? ஆம் அல்லது இல்லை என்று குறிப்பிடுங்கள் என்று ஓட்டெடுப்பு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது