டுவிட்டர் நிறுவனத்தை டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் வாங்க தயாராக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கியுள்ளார். இதனையடுத்து, டுவிட்டர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய விரும்புவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். முன்னதாக டுவிட்டர் நிறுவனத்தின் 9 புள்ளி 2 சதவீத பங்குகளை வாங்கி இருந்த எலான் மஸ்க், தற்போது மொத்த டுவிட்டர் நிறுவனத்தையும் வாங்கியுள்ளார். இதனால், “Twitter CEO” என்ற ஹாஷ் டேக் ட்ரெண்டாகி வருகிறது.