உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான, தொழிலதிபர் எலான் மஸ்க் ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தின், 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார், .’டெஸ்லா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் டுவிட்டர் சமூக வலைதளத்தின், 9.2 சதவீத பங்குகளை அவர் வாங்கியுள்ளார். அதாவது அந்நிறுவனத்தின், 7.35 கோடி பங்குகளை அவர் வாங்கியுள்ளார்.பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இதை அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் வாயிலாக டுவிட்டர் நிறுவனத்தின் மிகப் பெரிய முதலீட்டாளராக அவர் விளங்குகிறார். முன்னதாக எலான் மஸ்க், டுவிட்டர் சமூக வலைதளம் குறித்து பல விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இதனால், அவர் தனியாக சமூக வலை தளத்தை துவக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டுவிட்டரின் பங்குகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.