தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஏற்று கூலி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் குடோன் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மல்லூர் டாஸ்மாக் குடோன் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் டாஸ்மார்க் குடோனில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான ஏற்று கூலியாக பெட்டி ஒன்றுக்கு ரூ.3.50 வழங்கிட வேண்டும், இஎஸ்ஐ ஈபிஎப் திட்டத்தை அனைத்து தொழிலாளர்களுக்கும் சட்டப்படி அமலாக்க வேண்டும், ஒப்பந்ததார நிர்வாகத்துடன் கூலி உயர்வு ஒப்பந்தத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தலையீடு செய்து கூலி ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், பணியிடத்தில் குடிநீர், முதலுதவி பெட்டி வசதி ஏற்படுத்தி தர வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மல்லூர் டாஸ்மாக் குடோன் பொறுப்பாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சுமைப்பணி சம்மேளன பொதுசெயலாளர், சுமைப்பணி சம்மேளன ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் குடோனில் பணியாற்றும் தொழிலாளர்களும் பெண்களும் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.