கோடைக்காலத்தில் வாகனங்களில் முழுக்கொள்ளளவுக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பினால் வாகனம் வெடித்துவிடுமென இந்தியன் ஆயில் எச்சரித்திருப்பதாக வதந்தி ஒன்று இந்த வருடமும் மீண்டும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. முன்னதாக, கடந்த சில ஆண்டுகளாக கோடைக்காலம் வந்ததும் இந்த வதந்தி பரப்பப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்தியன் ஆயில் என தலைப்பில் போடப்பட்டிருப்பதால் பலரும் இந்த தகவலை நம்பிவிடுகின்றனர். இந்தநிலையில், கடந்த 2018ஆம் ஆண்டிலேயே இந்தியன் ஆயில் இந்த தகவலை மறுத்து தனது சமூக ஊடக பக்கங்களில் விளக்கமளித்துள்ளது. அதில், முழுக்கொள்ளளவு எரிபொருள் நிரப்பினால் வெடி விபத்து ஏற்படும் என்பது அடிப்படை ஆதாரமற்றது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் குளிர்காலம், கோடைக்காலம் என அனைத்து பருவநிலைக்கும் ஏற்றவகையில் பாதுகாப்புடன்தான் வடிவமைக்கிறார்கள். எனவே முழுவதுமாக எரிபொருள் நிரப்புவது பாதுகாப்பானது தான் என கூறியுள்ளது.