ஆன்மிகச் சுற்றுப்பயணமாக சேலம் தாரமங்கலம் பகுதிக்கு சென்றிருக்கும் சசிகலா, அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இங்கு ஏராளமான தொண்டர்கள் சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா, கொங்குமண்டல மக்கள் தன்னை அன்பாக உபசரித்தது மன மகிழ்ச்சியை தருகிறது. ஒருவர் அரசியலில் இருப்பதும் இல்லாமல் போவதும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவு. தனி ஒரு மனிதராக யாரும் சொல்ல முடியாது. அதனால் தமிழக மக்களும், கழகத் தொண்டர்களும் யாரை விரும்புகிறார்களோ, அவர்களை அரசியலில் இருந்து யாராலும் விரட்ட முடியாது என்றார். மேலும் அவர், தமிழகத்தில் அதிமுக தொண்டர்கள் பெரும் ஆதரவு எனக்கு உள்ளது. தமிழக மக்களும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் அது நிச்சயம் வெற்றி பெறும் என்றார் முன்னதாக தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக சசிகலா இப்படி கூறியுள்ளார்.