தென் ஆப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் 9ஆவது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி, தென் கொரியாவுடன் மோதியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. மற்றொரு கால்இறுதியில் 3 முறை சாம்பியனான நெதர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. இன்று நடைபெறும் அரைஇறுதியில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் இடையே பலப்பரீட்சை நடக்க உள்ளது.