தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி, இன்று காலை தொடங்கியது. இதில், சொத்துவரி உயர்த்தியது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், “உள்ளாட்சி அமைப்புகளிடம் இருக்கக்கூடிய நிதி ஆதாரத்தை வைத்து தற்போதுள்ள நிலையில் எதையும் செய்ய முடியாது என்ற காரணத்தால், இந்த சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகும்” என்றார். இதற்கு எதிர்க்கட்சிகளான அதிமுகவும், பி.ஜே.பியும் வெளிநடப்பு செய்தன.