மலேசியாவின் பாரம்பரியமிக்க உணவுவகைகளில் ஒன்றான நாசி-லி-மாக்கை சென்னையில் தயாரித்து அசத்திவருகிறார் பிருந்தா முரளி.சென்னை வளசரவாக்கத்தில் தனி கிச்சன் ஒன்றை உருவாக்கி அங்கு வைத்து நாசி-லி-மாக் உணவை இவர் தயாரிக்கிறார். தினமும் 100 பிளேட்க ளுக்கு குறையா மல் ஆர்டர்கள் குவிவதால் விரைவில் ரெஸ்டாரண்ட் தொடங்கும் திட்டத்திலும் இருக்கிறார் பிருந்தா முரளி. அன்றாடம் தனது மகனுடன் சென்று கோழிக்கறி, இறால் உள்ளிட்ட இறைச்சிகளை வாங்கி வந்து அதனைத் தனது தயாரிப்பில் உருவான மசாலாவில் ஊறவைத்து நாசி-லி-மாக் தயாரிக்கிறார். இவரது நாசி-லி- மாக்கை சுவைத்த கோலிவுட் பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளதுடன் தொடர்ந்து ஆர்டர்களும் கொடுக்கின்றனர். தனது கிச்சன் குறித்து பிருந்தா முரளி “பெண்களின் குரல்” வாசகர்களுக்காக கூறியது: ‘நடிகர்கள் சத்யராஜ், முரளி உள்ளிட்டோருடன் தமிழ் சினிமாவில் 90-களில் நடித்திருக்கிறேன். திருமணம் முடிந்த பின்னர் நானும் எனது கணவரும் மலேசியாவுக்குக் குடியேறிவிட்டோம். எனது கணவர் மலேசியாவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றினார். எனக்கு ஒரு மகன், அவனைப் பள்ளிப்படிப்பு முழுவதும் மலேசியாவில் படிக்க வைத்தேன். கல்லூரிப் படிப்புக்காக மகனை சென்னை கல்லூரியில் சேர்ப்பதற்காக இங்கு வந்தேன். பிறகு இங்கேயே குடிவந்த நான், மகனின் விருப்பப்படி இப்போது மலேசியாவின் பிரபல உணவுவகையான நாசி-லி-மாக்கைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். எனது கணவர் ஹோட்டல் துறையில் பணியாற்றிய காரணத்தினாலோ என்னவோ தெரியவில்லை, என் மகனுக்கும் அந்தத் துறைமீது அதிக ஆர்வம் இருந்தது. சென்னையில் மலேசிய உணவு வகைகளை வழங்கக்கூடிய ரெஸ்டாரண்ட் தொடங்கும் திட்டத்தில்
இருக்கிறோம். அதற்கு முன்னோட்டமாகத்தான் இப்போது சிறியளவில் இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறேன். சிக்கன் நாசி-லி-மாக், பிரான் நாசி-லி-மாக் வகைகள் மட்டும் இப்போது தயாரிக்கிறோம். இதற்கான பொருட்களைத் தினமும் ப்ரஷ்ஷாக வாங்குவோம். போன் ஆர்டரின் பேரில் எனது மகனே
டெலிவரியும் செய்து வருகிறான். ரெஸ்டாரண்ட் தொடங்குவதற்கு முன்பு இது போன்ற வேலைகளையெல்லாம் செய்தால் தானே அனுபவம் கிடைக்கும்.
முதலில் இது சரிபட்டு வருமா என யோசித்தேன். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல முறையில் வரவேற்பு கிடைத்திருக்கிறது.’’