15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 59ஆவது லீக் ஆட்டத்தில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. நேற்று மாலை 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தபோட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, முதலில் ஆட்டத்தைத் தொடங்கிய சென்னை அணி 16 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 14.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்து வெற்றியடைந்தது. இதுவரை இந்ததொடரில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றியும் 8 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 12 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றியும் 9 போட்டிகளில் தோல்வியையும் தழுவி கடைசி இடத்தில் உள்ளது. இந்தத்தொடரின் தொடக்கத்தில் இருந்தே சென்னை மற்றும் மும்பை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என இரு அணி ரசிகர்களும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்தநிலையில், இந்த ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியுற்றதால் பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து உள்ளது. இந்தத்தொடரில் சென்னை அணியின் குறைந்த பட்ச ஸ்கோர் மும்பை உடனான இந்த ஆட்டத்தில் பெற்ற 96 ரன்களே ஆகும். மேலும், நேற்றய போட்டியுடன் இந்தத்தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறுகிறது. முன்னதாக இந்த ஆட்டத்தில் சென்னை அணியே வெல்லும் என்று முந்தைய ஆட்ட தரவுகளும் கருத்து கணிப்பு கூறி இருந்த நிலையில் சென்னை அணி தோல்வியுற்றது. சென்னை அணியின் ரசிகர்களை ஆழ்ந்த சோகத்தில் உள்ளது.