15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 59ஆவது லீக் ஆட்டத்தில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோத உள்ளது. இன்று மாலை 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இந்தபோட்டி நடைபெற இருக்கிறது. இதுவரை இந்ததொடரில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 11 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றியும் 9 போட்டிகளில் தோல்வியையும் தழுவி கடைசி இடத்தில் உள்ளது. இந்தத்தொடரின் தொடக்கத்தில் இருந்தே சென்னை மற்றும் மும்பை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என இரு அணி ரசிகர்களும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்தநிலையில், முந்தைய போட்டிகளின் நிலவரப்படி மும்பை அணியை விட சென்னையே இந்த ஆட்டத்தில் வெற்றிப்பெற அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.