திருநெல்வேலி நெல்லையப்பர் சன்னதியில் வீற்றிருக்கும் காந்திமதி அம்பாள் பின்புறம் கணபதி சிலை உள்ளது. இங்குள்ள தூணில் படரும் சூரிய வெளிச்சமானது சூலாயுதம்போல் காட்சியளிக்கிறது. இந்த காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான். புதிதாக வந்த பக்தர் யாரோ இதை புகைப்படம் எடுத்து வைரல் ஆக்கியிருக்கலாம் என்கின்றனர், கோயில் நிர்வாகிகள்.