நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர் செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதியாகும். இந்தசாலைகளில் வனவிலங்குகள் உலாவருவது வழக்கம். இந்தநிலையில் சாலையில் உலாவந்த ஒற்றை காட்டு யானையை அருகில் சென்று காண விரும்பி சில சுற்றுலா பயணிகள் தாங்கள் வந்த வாகனத்தை விட்டு கீழே இறங்கி, படம் எடுக்க முயற்சித்துள்ளனர். அப்போது ஒற்றை யானை கோபமடைந்து சுற்றுலா பயணிகளை ஆவேசமாக துரத்தியுள்ளது. யானை திடீரென துரத்தியாதால் பயந்துபோன சுற்றுலா பயணிகள் விழுந்தடித்துக்கொண்டு ஓடி வாகனத்தில் ஏறி தப்பிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. வனப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை விட்டு இறங்குவது வனகுற்றமாகும். ஆனால் சிலர் இப்படி செய்வது ஆபத்தில் முடிவது தொடர்கதையாகி உள்ளது.