நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் வடிவேலுவும் பிரபுதேவாவும் ‘மனதைத் திருடிவிட்டாய்’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்தபடத்தில் வரும் காமெடி சீனில் `சிங் இன் தி ரெயின்’ என வடிவேலு ரைம்ஸ் பாடும் காட்சியை இப்போது பார்க்கும் போதும் மக்கள் ரசித்து தங்களை மறந்து சிரிக்கின்றனர். பிரபுதேவா-வடிவேலு காம்போ டான்ஸ் மாஸ்டராக இருந்து பிரபுதேவா கதாநாயகனான காலத்தில் இருந்தே ஹிட் அடித்து வருகிறது. காதலன், ராசய்யா, மிஸ்டர் ரோமியோ, மனதை திருடிவிட்டாய் என இணைந்து நடித்த திரைப்படமாக இருந்தாலும் சரி, பிரபுதேவா இயக்கி வடிவேலு நடித்த போக்கிரி, வில்லு திரைப்படங்களிலும் சரி இவர்களின் ஜோடியை தட்டிக்கொள்ள ஆளே இல்லை என்ற லெவளில் பின்னி பெடலெடுப்பார்கள். அந்தவகையில், பிரபுதேவாவிடம், வடிவேலு `சிங் இன் தி ரெயின்..’ ரைம்ஸை பாடும் வீடியோ ஒன்றை பிரபுதேவா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு சில படங்களின் மூலம் ரீஎன்டிரி கொடுக்க உள்ளநிலையில், அவரிடனான தனது விடியோவை பிரபுதேவா பகிர்ந்திருப்பது, இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளார்களா? என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எது எப்படியோ, ஆனால் இதன் மூலம் ரசிகர்களுக்கு காமெடி விருந்து நிச்சயம்.