டில்லியில் நடைபெற்ற 37ஆவது நாடாளுமன்ற அலுவல் மொழி குழு கூட்டத்தில் தலைமை வகித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழியை வளர்ப்பது குறித்து பேசி இருப்பது நாடு முழுவதும் உள்ள பிராந்திய மொழியினருடையே பெரும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. அந்தவரிசையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற கவிதையில் வரும், ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகளை சுட்டிக்காட்டி தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவு ஒன்றினை இட்டுள்ளார். அந்த போட்டோவில், ‘ழ’ கரத்தை தங்கிய பெண் தாண்டவமாட, கீழே ‘தமிழணங்கு’ என்றும், புரட்சிக்கவிஞரின் பாடல் வரிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பதிவு நெட்டிசன்களால் அதிகமாக பகிரப்பட்டு பேசு பொருளாகி உள்ளது.