சென்னையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து, பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நீண்டகாலம் பணியாற்றியவர் இந்திரா நுாயி.’தன் வாழ்க்கை வரலாறு தொடர்பாக, ஒரு புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். அதில் இந்தியாவுடனான தன் தொடர்புகள் குறித்து தனியாக ஒரு அத்தியாயத்தை இந்திய வாசகர்களுக்காக எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
” நான் 43 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு சென்றிருந்தேன். இந்தியாவை என் நினைவில் இருந்து எப்போதும் பிரிந்தது இல்லை. நான் அசைவை உணவை தவிர்த்து சைவ உணவை கடைபிடிக்கின்றேன். என்வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றாமல் எங்கும் வெளியில் சென்றதில்லை. அமெரிக்க தொடர்களை டிவியில் பார்த்தாலும் இந்திய தொடர்களையும், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியையும், பார்க்கத் தவறியது இல்லை. இவற்றை எல்லாம் பார்க்கும்போது சென்னையில் வளர்ந்த நிகழ்வுகள் நினைவுக்கு வரும். இந்திய தொடர்களை பார்க்கும் போது நமது இந்திய கலாச்சாரம் எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பது தெரிய வருகிறது. பெண்களுக்கு எந்த அளவு சுதந்திரம் கிடைத்துள்ளது என்பதும் தெரிய வருகிறது.என்னை பொருத்தவரை பெண்கள் சம்பாதிக்கும் விஷயத்தில் எந்த அளவு அனுமதி இருக்கிறது என்பதும், அதில் இந்தியா ஒரு காலை முந்தைய காலத்திலும் ஒரு காலை எதிர்காலத்திலும் வைத்துள்ளது. பெண்களுக்காக நிறைய சட்டங்கள் இருக்கின்றது. மாணவர்களை விட மாணவியர்களே நன்றாக படிக்கிறார்கள். ஆனாலும் ஆனாலும் ஆண்களை சார்ந்தே சம்பளம் இல்லாத தொழிலாளியாக பெண்கள் இருக்கின்றனர். பெண்களும் தொழில்கள் ,வேலைகளில் ஈடுபட வேண்டும். தனக்காகவும், குழந்தைகளுக்காகவும், இந்த சமூகத்துக்காகவும் அவர்கள் சுயமாக சத்பாதிக்க வேண்டும் “என்று பேசியுள்ளார்.