நடிகைகள் சமந்தா, நயன்தாரா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ள 3 பாடல்கள் இதுவரை வெளியாகி வேறலெவல் ஹிட்டாகி உள்ளதால், இந்தபடத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. இந்தநிலையில், நடிகை சமந்தா நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில், ’டாட்டூ குத்திக்கொள்ள விரும்புகிறீர்களா’? என்ற ரசிகரின் கேள்விக்கு எப்போதும் டாட்டூ குத்திக்கொள்ளாதே. அதன் வலி மறைய 6 மாதங்கள் ஆகலாம் என்று கூறியுள்ளார். பின்னர் ’உங்கள் தோழி நயன்தாரா’ பற்றி கூறுங்கள் என்ற கேள்விக்கு நயன்தாரா தனித்துவமானவர். காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் அவரைக் காண உங்களைப் போலவே நானும் ஆவளாக காத்திருக்கிறேன் என்று தன்னை நயன்தாரா கட்டிப்பிடித்தப்படி உள்ள ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார்.