சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேண்டாததை நீக்கிய சிற்பி, வேண்டியதை சேர்த்த ஓவியர் என்று அம்பேத்கர் புகழ் பாடினர். அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கடைபிடிக்கப்படும் என்றும், அந்நாளில் தமிழ்நாடு முழுவதும் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார். அம்பேத்கர் மணிமண்டபத்தில், அவரது முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் என்றும், அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள், செம்பதிப்பாக தமிழில் மொழி பெயர்க்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை அதிமுக, பாஜக உள்ளிட்ட சர்வ கட்சிகளும் வரவேற்றன.