முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலாவை, அந்தபதவியில் இருந்தும், டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றினார்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் அடங்கிய அதிமுக. இந்த தீர்மனத்தை எதிர்த்து சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது செல்லும் என்றும் இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து சசிகலா தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.