சென்னை மைலாப்பூரை சேர்ந்த சங்கீதா எனும் மாணவி சத்தமில்லாமல் சிலம்பத்தில் சாதனை படைத்துள்ளார். தற்போது உள்ள சமூக சூழ்நிலையில் பெண்கள் கட்டாயம் தற்காப்பு கலையை கற்றுக்கொள்வது சிறந்தது. சங்கீதா ஒரு படி மேலே சென்று சிறுவயதில் சிலம்பம் மீது ஆர்வம் கொண்டு பயின்று வந்தார் தன் பள்ளி படிப்பை சிவசாமி பெண்கள் மேல்நிலை பள்ளியில் முடித்தார். விளையாட்டால் தன் பள்ளி படிப்பு பாதிக்காது என்பதை இறுதி தேர்வில் 96% மதிப்பெண் பெற்று நிருபித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு ஒதுக்கீட்டில் (sports quota) Bio Tech முதலாம் ஆண்டு படிப்பு வரும் மாணவி கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து தேசிய அளவில் சிலம்பத்தில் முதலாம் இடம் பெற்றுவருகிறார். தொடர் உடற்பயிற்சியால் தன் உடலையும் மனதையும் கட்டுக்கோப்புடன் கவனித்துக் கொண்டதால் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்ததாகவும் கடந்த ஆண்டு ஒரு சிலம்பம் பயிற்சி வகுப்பிற்காக சிறப்பு விருந்தினராக அமெரிக்கா இருந்து சாதனை படைத்த மாணவி சங்கீதா