15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30ஆவது லீக் ஆட்டம் நேற்று இரவு மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சும் ராஜஸ்தான் ராயல்சும் மோதின. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. 218 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி ஆடிய கொல்கத்தா அணி மிகவும் போராடி 19.4 ஓவரில் 210 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது. கொல்கத்தாவுக்கு இந்த தொடரில் இது 4ஆவது தோல்வியாகும்.