கொரோனாவால் கணவர் உயிரிழந்துவிட அவர் வேலை பார்த்த தனியார் நிறுவனத்தில் இழப்பீடு கேட்டு சட்டம் போராட்டம் நடத்தி வருகிறார் அவருடைய மனைவி.
சென்னையை சேர்ந்த காமேஸ்வரியின் கணவர் ரமேஷ் சுப்ரமணியன்.இவர் கடந்த ஜுன் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர் உயிரிழப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவர் வேலை பார்த்து வந்த சினமேடியா பிரைவேட் நிறுவனம் இவரை பணிநீக்கம் செய்தது.இதற்கு முன்னதாக அழைத்த அவருடைய நிறுவன பிரதிநிதிகள் அவரை பணி விலகுமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர். அதற்கு ரமேஷ் சுப்ரமணியன் “குடும்பம் தன்னை நம்பி இருப்பதால் நிறுவன விதிமுறைப்படி இரண்டு மாதம் பணி நீடிக்குமாறு கேட்டுள்ளார். பலமுறை மன்றாடியும் அதை ஏற்காத நிறுவனம் அவரை அடுத்த சில தினங்களில் வேலை நீக்கம் செய்துள்ளது. இது குறித்து பேசிய,காமேஸ்வரி வேலை இழந்த அடுத்த இரண்டு மாதங்களில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.அவரைக் காப்பாற்ற 18 லட்ச ரூபாய் செலவு செய்தோம்.
ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் தான் அவர் கொரோனா வந்து இறப்பதற்கு காரணம் என்று கலங்குகிறார். இது தொடர்பாக பேசிய அந்த நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரி (எச். ஆர் ) ராஜேஷ் குமாரசாமி “ரமேஷ் சுப்ரமணியம் நல்ல வாய்ப்பு வந்ததால் தானாக முன்வந்து ராஜினாமா கொடுத்தார் என்றும்,மேலும் தன்னை உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே அந்த தனியார் நிறுவனம் இழப்பீடாக இரண்டு லட்ச ரூபாய் கொடுத்த நிலையில், அதனை வாங்க மறுத்துள்ளார் காமேஸ்வரி. அந்த நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டு தொழிலாளர் நல ஆணையத்திலும் முறையிட்டுள்ள நிலையில்,தொழிலாளர் நல அமைச்சகம் அந்த நிறுவனத்துக்கு மெயில் அனுப்பி உரிய இழப்பீட்டை கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.