திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் கொரோன நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தனியார் நிறுவனம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்தவிழாவில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு தையல் ஏந்திடும், மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் 27 மாணவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் கல்வி கட்டணம் உள்ளிட்ட ரூ. 20 லட்ச மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கினார்.