ராணிப்பேட்டை மாவட்டத்தில், புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்தநிலையில், இந்த கட்டுமான பணிகளை திடீரென இன்று மாலை, கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் அங்கு நடைபெற்று வரும் கட்டட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார். அதிகாரிகளும் கட்டட வரைபடத்தை அமைச்சரிடம் காண்பித்து விளக்கியதுடன், கட்டட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் கூடிய விரைவில் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என்றும் உறுதி கூறினர். அமைச்சர் ஆய்வின் போது, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், ராணிப்பேட்டை நகர மன்ற உறுப்பினர் சுஜாதா வினோத் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.