கேரள மாநில திரைப்பட விருது வழங்கும் குழுவில் நடிகையும் இயக்குநருமான சுஹாசினிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கேரள மாநில அரசின் திரைப்பட விருது வழங்கும் விழா விரைவில் நடைபெற உள்ளது, முதன் முறையாக விதிமுறைகள் வகுக்கப்பட்டு அதற்கான வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், அதற்கான குழுவை அந்த மாநில அரசு அமைத்துள்ளது.அதில் நடிகையும் இயக்குநருமான சுஹாசினி விருது தேர்வு குழுவில் முக்கிய பொறுப்பில் இடம் பெற்றுள்ளார். எட்டு முறை தேசிய விருது பெற்ற கன்னட திரைப்பட இயக்குநர் சேஷாத்ரி மற்றும் இயக்குநர் பத்ரன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.