கேரளாவில் இயற்கை முறை விவசாயத்தில் அங்குள்ள பெண்கள் அமைப்பு ஒன்று அசத்தி வருகின்றது.
செருவத்தூர் போட்ட மண்டலத்திற்கு உட்ப்பட்ட கோட்டக்காகம்,பகுதியில் உள்ள பராசல கிரிஷி அமைப்பின் கீழ் செயல்படும் காருண்யா பெண்கள் குழுவைச் சேர்ந்த பெண்கள் இயற்கை முறை விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த மாநில அரசின் தரிசு நிலங்களைப் பயன்படுத்தி இந்த இயற்கை முறை விவசாயத்தை அவர்கள் செய்து வருகின்றனர்.இதற்காக தரிசாக இருந்த நிலத்தை அரிசிடம் இருந்து வாங்கி அதைப் பண்படுத்தி அதில் ஈடுபட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் நிலத்தை வாங்கியபோது அதனை பயிர்செய்வதற்கு ஏற்ற நிலமாக மாற்றுவதற்கு அந்த பெண்கள் பெரும் பாடுப்பட்டுள்ளனர்.கரடு முரடாக இருந்த நிலத்தை சமன்படுத்தி நீர் ஆதாரங்களை அமைத்து அறிவியல் முறையிலான இயற்கை வழி விவசாயத்தை மேற்கொண்டுள்ளனர்.அந்த நிலத்திற்கு தகுந்தவாறு விதைகளும்,மருந்தும் கிடைக்காத நிலையில் அதற்காக அந்த பெண்கள் தேடி அலைந்துள்ளனர்.அதன் பிறகு பராசல கிரிஷி அமைப்பு உதவியதைத் தொடர்ந்து தற்போது கீரை,வெள்ளரி,பட்டாணி உள்ளிட்டவற்றை பயிர்களை விளைவித்து வருகின்றனர்.
இதுகுறித்துப் பேசியுள்ள அந்த பெண்கள் குழுவின் தலைமை நிர்வாகி ஜோலெட் ரூபி,”மாநில அரசின் வேளாண்மைத்துறை அதிகாரிகள் அளித்த ஆதரவின் காரணமாக இந்த இயற்கை முறை விவசாயத்தை எங்களால் மேற்கொள்ள முடிந்தது.இல்லை என்றால் இவ்வளவு பெரிய செயலை செய்திருக்க முடியாது.எங்களுக்கு ஆதரவாக இருந்த அரசாங்க அதிகாரிகளுக்கு எனது நன்றிகள் என்று கூறியுள்ளார்.