குழந்தை திருமணத்தால் வருடத்திற்கு 22 ஆயிரம் பெண்கள் இறக்க நேரிடுவதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.
கடந்த 11 ஆம் தேதி தான் உலக பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடி முடித்துள்ளோம்.‘இந்த நிலையில் “சேவ் தி சில்ரன்” என்ற அமைப்பு பெண் குழந்தைகள் குறித்த 2021 ஆம் ஆண்டின் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் ஆண்டுதோறும் 22 ஆயிரம் பெண்கள் குழந்தை திருமணங்களால் இறக்க நேரிடுவதாக கவலை தெரிவித்துள்ளது.இந்த பெண் குழந்தைகள் இறப்பு பெரும் பாலும் குழந்தை திருமணங்களால் ஏற்படுகின்ற கர்ப்பத்தால் இறக்க நேரிடுவதாக கூறியுள்ளது. அண்மையில் 11 – க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை திருமணங்களால் ஏற்பட்ட கர்ப்பத்தை கலைக்க கேரள மாநில நீதிமன்றத்தில் அனுமதி கோரி இருந்தது குறிப்பிடத்தக்கது