வேலூர் மாவட்டம், வேலூர், காகிதப்பட்டறையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைவு குறித்து கண்டறியும் முகாம் மற்றும் செயலி துவக்க விழாவை மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் துவக்கி வைத்தார்.
இதில் குழந்தைகளின் எடை அறிதல், என்ன வகையான ஊட்டச்சத்து குறைவு என்பதை கண்டறிந்து அவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செயலி மூலம் தெரிவிப்பதும், இதன் மூலம் குழந்தைகள் ஊட்டச்சத்து பெற வழிவகை செய்யவும் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் மாவட்டம் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு சரி செய்யப்படும். இந்த ஆய்வின் போது வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் உடன் இருந்தனர்.