குரலற்றவர்களின் குரலாக ஒலிக்க வேண்டும்-வினிதா
தமிழ் செய்தி ஊடகங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய
அளவில் மட்டுமே பெண் செய்தியாளர்கள்
இருக்கின்றனர். அவர்களில் திருச்சியைச் சேர்ந்த
வினிதாவும் ஒருவர். ஒரு தனியார் தொலைக்காட்சியின்
திருச்சி மண்டல தலைமை செய்தியாளராகப்
பணியாற்றிவரும் இவர் கள ஆய்வுக்கு அஞ்சாதவர்.
மணல் திருட்டில் தொடங்கி பல சமூக விரோதச்
செயல்கள்வரை வெளிச்சம் போட்டுக்காட்டியவர்
இதற்காக இவருக்கு வந்த மிரட்டல்களும் வசவுகளும்
ஏராளம். ஆனாலும், ஆற்றக்கூடிய பணிக்கு
நேர்மையாகச் செயல்பட வேண்டும் என்ற
லட்சியத்துடன் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறார்.
தனது செய்தியாளர் பணி குறித்து நமது கேள்விகளுக்கு
அவர் அளித்த பதில்கள் இதோ;
கேள்வி: செய்தியாளர் பணியை ஏன் தேர்வு
பதில்: நான் சட்டக்கல்லூரியில் பயின்றபோதே இந்த
சமூகத்திற்கு ஏதாவது ஒரு வகையில் நமது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என நினைத்தேன்.
குரலற்றவர்களின் குரலாக நாம் ஒலிக்க வேண்டும் என எனது கல்லூரிக் காலத்திலேயே
முடிவெடுத்துவிட்டேன். அதற்கேற்றாற் போல் சட்டம் படித்து முடித்தவுடன் தனியார் தொலைக்காட்சியில்
செய்தியாளர் பணி கிடைத்தது. பிறகு தனியார் பத்திரிகையில் சில காலம் பணி, அதன்பிறகு மீண்டும் ஒரு
தனியார் தொலைக்காட்சி என பணியாற்றினேன். இப்போது தனியார் தொலைக்காட்சியில் திருச்சி மண்டல
தலைமை செய்தியாளராக இருந்து வருகிறேன்.
கேள்வி: நீங்க ஒரு பெண் செய்தியாளர், அப்படியிருக்கும்போது இதுவரை உங்களுக்கு மிரட்டல்கள்
பதில்: மிரட்டல்கள் வந்ததுண்டாவா எனக்கு வராத மிரட்டல்களா! அந்தளவிற்கு எனக்குப் பல்வேறு தரப்பில்
இருந்தும் மிரட்டல்கள் வந்திருக்கின்றன. ஒரு முறை கரூர் அருகே மணல் குவாரி ஒன்றில் இருந்து லைவ்
கொடுத்துவிட்டு வீடு திரும்புவதற்குள் எனது உறவினரிடம் பாப்பாவைப் பார்த்து நடந்துக்கச் சொல்லுங்க என
மர்ம நபர் ஒருவர் மிரட்டியிருக்கிறார். ரங்கம் சிலை விவகாரத்திலும் மறைமுக மிரட்டல்களும்
இடையூறுகளும் வந்தன. ஆனால் இதற்கெல்லாம் அஞ்சி ஓடுபவள் நானில்லை என்பது என்னை மிரட்டிய
பேர்வழிகளுக்குத் தெரியும். அதனால் அவர்களே ஒரு கட்டத்தில் ஓய்ந்துபோனார்கள்.
கேள்வி: செய்தித்துறையில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம்…
பதில்: கற்றுக்கொண்ட பாடம் என்று குறிப்பிட்டு எதையும் கூற முடியாது. இந்தத் துறையைப் பொறுத்தவரை
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு களமும் புதிய பாடங்களைப் பயிற்றுவிக்கிறது. என்னைப் பொறுத்தவரை
தனிமனித தாக்குதலில் ஈடுபடக் கூடாது என நினைப்பவள். நாம் கொடுக்கக்கூடிய செய்திகள் வெறும்
பரபரப்பை மட்டும் இலக்காகக் கொள்ளாமல் சமூக அக்கறை சார்ந்தும் செயல்பட வேண்டும். உதாரணத்திற்கு
கணவன் மனைவிக்குள் நடக்கும் குடும்ப மோதலைப் படம்பிடித்து அதற்கு ஒரு தலைப்பு சூட்டி பரபரப்பு
செய்தியாக வெளியிடுவதற்கு முன்னர், அந்தப் பெற்றோ ரின் குழந்தைகள் எதிர் காலத்தையும் கருத்தில்
கேள்வி: செய்தி சேகரிப்பு நிகழ்வில் மறக்க முடியாத சுவாரஸ்ய நிகழ்வுகள் ஏதேனும் இருந்தால்
பதில்: நெடுவாசல் போராட்டத்தின் போது திருச்சிக்கும் நெடுவாசலுக்கும் ஓடியதை மறக்க முடியாது. உள்ளூர்
செய்தியாளரிடம் நேரலை கொடுக்கும் அளவுக்கு தொழில்நுட்ப வசதி இல்லாததால் திருச்சியில் இருந்து
நெடுவாசல் சென்று நேரலை கொடுத்து களத்தில் செய்தி சேகரித்துவிட்டு இரவு 9 மணிக்குப் புறப்பட்டு 12
மணிக்கு திருச்சி வந்தேன். காலை 6 மணிக்கு அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பில் மீண்டும் நெடுவாசல்
செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. 22 நாட்கள் நடந்த போராட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட நாட்கள்
இப்படித்தான் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தேன். இதேபோல் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி
மறைவின்போது எனக்கு திருச்சியில் இருந்து சென்னைக்குப் பணி ஒதுக்கப்பட்டு அங்கு களத்தில் நின்று
பணியாற்றியதை மறக்க இயலாது.
கேள்வி: வழக்கறிஞராகவே பிராக்டீஸ் செய்திருக்கலாம் என என்றாவது நினைத்ததுண்டா?
பதில்: ஒரு நாளும் அப்படி நினைத்ததில்லை, வழக்கறிஞராக இருந்திருந்தால் குறிப்பிட்ட நபர்களுக்காக
மட்டும் நீதி கோரி வாதாடியிருப்பேன். இன்று செய்தியாளராக ஊரில் நடக்கும் அவலங்களை
வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து சமூகத்திற்காக வாதாடி வருகிறேன்.இதனால் செய்தியாளர் என்பதைப் பொறுப் பாகவும், கடமையாகவும் கருதுகிறேன்.