இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா வருகிற 16ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி அன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும்போது சந்திரன் உதயமாகும் இவ்விரண்டு கட்சிகளும் ஒரே நேரத்தில் நிகழுகின்றன. இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த அபூர்வ காட்சியை உலகத்திலேயே இரண்டு இடங்களில்தான் காணமுடியும். ஒன்று, கன்னியாகுமரியில். மற்றொன்று, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலைப் பகுதியில். ஆனால் அங்கு மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் செல்ல முடியாது. இதனால்தான் அன்றைய தினம் கன்னியாகுமரியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.