ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 24வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸும் குஜராத் டைட்டன்ஸும் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா 52 பந்துகளில் 87 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பின்னர், 193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து குஜராத் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.