day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துகள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் ஆகிய 6 மதத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட மூன்று நாடுகளில் இருந்து மதரீதியிலான துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கு இந்த சட்டம் பொருந்துகிறது. குடியுரிமை திருத்த சட்டம், நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டத்தை பின் வாங்கும் எண்ணம் துளி கூட இல்லை என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. ஆனால் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. காங்கிரசின் இந்த நிலைப்பாடு குறித்து மகிளா காங்கிரஸ் தேசியச் செயலாளர் ஹசீனா சையத் அளித்த பேட்டி இங்கு இடம்பெறுகிறது.

கேள்வி : குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்களுக்கு பாதிப்பு இருக்கிறதா?.
பதில் : குடியுரிமை திருத்த சட்டத்தால் கண்டிப்பாக இந்தியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மத்தியில் ஆளும் பாஜக அரசு முதலில் முத்தலாக், பின்னர் காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கம், தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவு, தற்போது குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களை கொண்டு வருவதில் மத்திய பாஜக அரசுக்கு என்ன அவசியம் தற்போது வந்தது என தெரியவில்லை. இத்தனை ஆண்டுகளாக மக்களோடு மக்களாகவும், ஒரு தாய் மக்களாகவும் வாழ்ந்தவர்களை இவர்கள் சந்தேகப்படுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. வேலைவாய்ப்பின்மை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், அதளபாதளத்தை நோக்கி செல்லும் பொருளாதாரம் போன்ற தலைவெடிக்கிற பிரச்சனைகள் நாட்டில் இருக்கும் நிலையில், சிறுபான்மையினரை குறி வைத்தே இந்த அரசு செயல்பட்டு வருவது, நாட்டின் வளர்ச்சிக்கு உசிதமான விஷயம் கிடையாது.

கேள்வி : மத அடிப்படையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறுவது சரியா?
பதில் : மத அடிப்படையில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை. முதலில் நம்மை மதத்தால் பிரிப்பார்கள், பின்னர் மொழியின் பேரில் பிரிப்பார்கள், தொடர்ந்து நம்மை சாதி ரீதியில் பிரிப்பார்கள். தமிழகத்தில் இந்தி மொழியை தான் பேச வேண்டும் என்பார்கள், பிரித்தாளும் சூழ்ச்சியை வைத்தே எத்தனை ஆண்டுகள் காலத்தை கடத்தலாம் என்று நினைக்கிறார்கள் என்பதே கேள்விக் குறியாக உள்ளது. இந்திய மக்கள் இவர்கள் மீது நம்பிக்கை வைத்து அளித்த வாக்குகளை, மத்திய பாஜக அரசினர் செல்லக்காசாக மாற்றி ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிற அளவுக்கு இந்த அரசு செயல்பட்டு வருவது வருந்தத்தக்க வகையில் உள்ளது.

கேள்வி: பிற நாடுகளில் இது போன்ற சட்டம் இருக்கிறதா, இல்லையா?
பதில் : உலகில் உள்ள எந்த நாட்டிலும் சரி, எனக்கு தெரிந்த வரையில், குறிப்பாக ஒரு மதத்தை குறி வைத்து சட்டம் இயற்றப்படவில்லை.

கேள்வி : குடியுரிமைத் திருத்த சட்டம் அரசியல் ஆக்கப்படுகிறது என்ற கருத்துக்கு தங்களது பதில் என்ன?.
பதில்: குடியுரிமை திருத்த சட்டத்தை நாங்கள் (காங்கிரஸ்) அரசியலாக்கவில்லை. பொதுமக்கள், மாணவர்கள் என தானாக முன்வந்து போராட்டம் நடத்துகிறார்கள். இன்றைய நாளில் நாட்டில் ஜனநாயக முறையில் போராடுபவர்களை மத்திய அரசு எந்த அளவிற்கு துன்புறுத்துகிறது என டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல், மற்ற இடங்களில் மாணவர்கள் மீது நடத்திய தாக்குதல் போன்ற சம்பவங்களிலேயே அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது. இதில் அரசியல் இல்லை என்று இதன் மூலம் தெரிகிறது. மக்கள் தார்மீக உரிமையிலும், ஜனநாயக முறையிலும் போராடுகிறார்கள். இதில் அரசியல் எங்கு இருக்கிறது?

கேள்வி : இந்தியாவை ஒரு இந்து நாடாக பிரகடனப்படுத்த இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது என்று சொல்வது சரியா?
பதில்: இந்தியாவில் உள்ள சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் அச்சுறுத்தல் உள்ளதால் தான், இத்தனை மக்கள் தெருவில் இறங்கி போராடுகிறார்கள். மத்திய அரசு செய்ய வேண்டிய வேலைகள் பல இருந்தும், இஸ்லாமியர்களுக்கு தொல்லை கொடுப்பதே பெரிய வேலையாக செய்து வருகின்றனர். இஸ்லாமியர்களும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் தான் என்பதை ஏன், மத்திய அரசில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள தவறுகின்றனர்? இந்தியா சுதந்திரம் பெற எத்தனை இஸ்லாமியர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அப்துல் கலாம், காயிதே மில்லத் போன்ற மிகப்பெரிய இஸ்லாமியர்கள் வாழ்ந்த நாடு இது என்பதை மத்திய அரசு மறந்துவிட கூடாது. சுதந்திரத்திற்காக போராடி உயிரிழந்த இஸ்லாமியர்களின் பட்டியலை பார்த்துவிட்டு வந்து, இஸ்லாமியர்கள் குறித்து பேச வேண்டும். உங்கள் (மத்திய அரசு) தேவைக்கு ஏற்ப ஜனநாயகத்தை மாற்ற முடியாது. இந்திய அரசியல் சாசனத்திற்கு என வழிமுறைகள், நெறிமுறைகள் இருக்கின்றன. பாஜக-வை நம்பி வாக்களித்த மக்களுக்காக மத்திய அரசு எப்போது செயல்படுகிறதோ, அப்போது தான் இந்த அரசு மக்களுக்கான அரசாக இருக்கும்.

கேள்வி : இந்தியாவில் உள்ள சிறுபான்மை முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தால் அச்சுறுத்தல் உள்ளதா?
பதில்: இந்தியா ஒரு மதசார்ப்பின்மையான நாடு. சாதி, மதம், பேதங்களை எல்லாம் வேரறுத்துவிட்டு, நாம் அனைவரும்  சகோதர – சகோதரியாக வாழ்ந்து வருகிறோம். பல சாதிகள், பல மதங்கள், பல மொழிகள் என வாழ்ந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்பது இந்தியாவின் சிந்தாந்தமே. இந்த சிந்தாந்தமே தெரியாதவர்கள் நம்மை ஆட்சி செய்து கொண்டிருப்பது மிகவும் வேதனை தரக்கூடியதாக இருக்கிறது.  இந்த அரசு சவர்க்கர் சிந்தாந்தம் கொண்டு நம்மை ஆட்சி செய்து வருவது கவலை அளிக்கக்கூடிய விஷயம். இந்தியாவுக்கு என தனி பன்முக தன்மை உண்டு. இந்த சட்டத்தால் உலக நாடுகள் நம்மை வேறு மாதிரியாக பார்ப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. ஆர்.எஸ்.எஸ். குரலை தான் பாஜகவினர் பின்பற்றி வருகின்றனர். இந்து, இந்துஸ்தான், இந்தியா என தான் பாஜகவினர் கூறி வருகின்றனர். இந்தியாவில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தை சேர்ந்தவர்கள், என பல இன மக்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருப்பது மத்திய அரசுக்கு பிடிக்கவில்லை. பிரிட்டனின் பிரித்தாளும் சூழ்ச்சியை தான், தற்போதை பாஜக அரசும் செய்து வருகிறது என்பதில் யாருக்கு மாற்று கருத்து இருக்க முடியாது. இந்தியா வளர்ந்த நாடாக பார்க்கப்படும் நேரத்தில், இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் இவர்களின் செயல்பாடு உள்ளது என்பது கவலைக்குரிய விஷயம் தான். மத்திய அரசு தன்னுடையே போக்கை மாற்றி கொள்ள வேண்டும், இந்தியாவின் சித்தாந்தை புரிந்து கொண்டு அரசியல் செய்தால், நமக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும்.

1. எதற்கு இந்த சட்ட திருத்தம்?
அண்டை முஸ்லீம் நாடுகளில் உள்ள ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் உட்பட்ட சிறுபான்மையினர் மதவன்முறைக்கு ஆளாகி துரத்தப்படுகையில் அடைக்கலம் தர வழிவகை செய்கிறது.

2. இதில் ஏன் இஸ்லாமியர்கள் இல்லை?
இயல்பாகவே பிரிவினையின்போது பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய நாடாகவே தம்மை பிரகடனப்படுத்தின. ஆனால் இந்தியா அன்றும் இன்றும் பல்வேறு மதத்தினர் கூடி வாழும் மதசார்பற்ற நாடாகவே உள்ளது.
இஸ்லாமிய நாடுகளில் உள்ள மாற்று மதத்தினர் மதம் காரணமாக வன்முறைக்கு உட்படுகையில் அவர்கள் அடைக்கலம் தேடும் இந்தியா அவர்களை அரவணைக்க வழிவகை செய்கிறது. 95மூ இஸ்லாமியர்கள் உள்ள இஸ்லாமிய நாட்டில் அவர்களுக்கு எப்படி மதரீதியான அச்சுறுத்தல் இருக்க முடியும்?

3. இதில் அகமதியர், ஷியா உட்பட்ட இஸ்லாமிய சிறுபான்மையினர் இல்லை என்று கூறுவது?
அவர்கள் அந்த மண்ணின் மைந்தர்கள், அவர்கள் இஸ்லாத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவே அன்றி மாற்று மதம் அல்லர். இஸ்லாமிய நாடுகளில் நிலவும் இஸ்லாத்தின் உட்பிரிவுகளில் உள்ள வேற்றுமைகளை தீர்க்க வேண்டிய நோக்கம் இந்த சட்டத்திருத்ததிற்கு இல்லை.
மேலும், அவர்கள் அங்கே துன்புறுத்தப்பட்டதாகவும் வரலாறு இல்லை. உதாரணம் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஜின்னா மற்றும் பூட்டோ குடும்பம் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள். தற்போதைய விமானப்படை தளபதி சா‡பெர் சவுத்திரி அகமதியர் பிரிவை சார்ந்தவர்.

4. இந்துக்கள், கிறிஸ்தவர்கள் அடைக்கலம் அளிக்கையில் புலம் பெயர்ந்து வாழும் இலங்கை தமிழ் ஹிந்து கிருஸ்துவர்களுக்கும் அளிக்கலாமே?
இலங்கை இஸ்லாமிய நாடென்று, இலங்கை தமிழர்களின் கோரிக்கை சிங்களர்க்கு ஒப்பான சமஉரிமையே. இலங்கையில் அவர்தம் மண்ணின் உரிமையை தாரைவார்த்து விட்டு இந்தியாவில் அடைக்கலம் தேட அவர்களே எள்ளளவும் நினைப்பது இல்லை. அங்ஙனம் செய்தால் அவர்தம் கொள்கையை நீர்த்து போக செய்யும். சிங்களர்க்கே அதனால் ஆதாயம் உண்டாகும்.

5. மியான்மரில் இருந்து விரட்டப்படும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கும் தரலாமே?
அவர்கள் இஸ்லாமிய நாடான வங்காளதேசத்தை கடந்து தான் இந்தியா வருகின்றனர். ஒரு இஸ்லாமிய நாடான வங்காளதேசம் ஏன் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க மறுக்கிறது என்பது அங்கே கேட்கப்பட வேண்டிய கேள்வி.

6. இந்தியாவில் உள்ள சிறுபான்மை முஸ்லீம்களுக்கும் இது அச்சுறுத்தலா?
இல்லவே இல்லை. ஒரு காலம் அப்படி எங்கும் இந்த சட்டத்தில் இல்லை. மேலும் உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா இதை தெளிவுபட உரைத்துள்ளார். எல்லோரும் இந்நாட்டு மக்களே. விஷவிதை விதைத்து பயத்தினை ஊட்டி பிரிவினை ஏற்படுத்த தி.மு.க, காங்கிரஸ் உட்பட்ட எதிர்கட்சிகள் முயல்கின்றன. அதற்கு சில ஊடகத்தினர் துணை நிற்கின்றனர்.

7. யார் யாருக்கு எதிரி?
கண்டிப்பாக தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் திரிணாமூல் காங்கிரஸினரே சிறுபான்மையினர்க்கு எதிரி. பா.ஜ.க. எள்ளளவும் மக்களிடையே வேற்றுமையை விதைக்காது.
அதேவேளையில், அண்டை நாடுகளில் உள்ள ஹிந்துக்கள், கிருஸ்துவர், பார்சிகள், சீக்கியர், சமணர் போன்றோர் அனாதைகளாவே இருக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் விரும்புகின்றன. அவர்கள் நலனில் மட்டும் ஏன் இந்த பாரபட்சம்? அவர்களில் ஹிந்துக்களும் உள்ளனர் என்பதாலா?

8. யார் செய்வது ஓட்டு அரசியல்?
வங்காளத்தில் இருந்து கணக்கற்ற இஸ்லாமியர்கள் வேலை வாய்ப்புக்கு ஊடுருவ விட்டு வேடிக்கை பார்த்த கட்சிகள் செய்தது தான் ஓட்டு அரசியல். மேற்கு வங்கத்தில் இன்றும் ஓட்டுக்காக மக்களை பயன்படுத்தி வரும் கட்சிதான் கூக்குரல் இடுகின்றன.

9. மற்ற நாடுகளுக்கும் இது பொருந்துமா?
ஏனைய நாடுகளில் இருந்து புலம் பெயர்பவர்கள் 1955ம் ஆண்டின் குடியுரிமை சட்டப்படி தகுதி இருப்பின் குடியுரிமை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த திருத்தம் மேற்கூறிய அண்டை நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு நடைமுறை சிக்கல்கள் இலகுவாக்க மட்டுமே.

10. இந்தியா ஒரு ஹிந்து நாடாக பிரகடனப்படுத்தவா இந்த திருத்தம்?
அறவே இல்லை. இது ஊடகத்தின் ஒரு பிரிவினர் மற்றும் பிரிவினை விதைக்கும் எதிர்க்கட்சிகள் எழுதிய கற்பனை திரைக்கதை. அண்டை நாடுகளில் இருந்து வரும் ஒரு சிறிய மக்கள் தொகை மூலம் ஒட்டு மொத்த இந்தியாவும் மாறிவிடும் என்பது இவர்கள் மிகைப்படுத்தப்பட்ட கற்பனை.
வழக்கம் போல ஹிந்துக்கள் மீது வன்மம் விதைக்கவே இதைபோன்று பரப்புகின்றனர்.
இத்தாலியில் இருந்து வந்து இந்தியாவில் குடியுரிமை பெற்ற ஒருவர், பிரிவினைக்கு முன் நம்மில் ஒருவராக இருந்த நம் சகோதரர்களை ஏற்றுக்கொள்ள எதிர்ப்பது தான் கலிகால முரண்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!