காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என கொரோனா வைரஸ் அடிக்கடி உருமாற்றம் பெற்று புதிய வகையாக மாறி பரவி வருகிறது. ஒமைக்ரான் வைரசில் இருந்து பிஏ1, பிஏ.2 ஆகிய 2 வகை வைரசுகள் தற்போது உலகம் முழுக்க பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் பிஏ.1, பிஏ.2 ஆகிய 2 வைரசுகளும் கலந்து எக்ஸ்-இ என்ற புதிய வகை கொரோனா வைரசை தோற்றுவித்துள்ளன. இந்த எக்ஸ்-இ வைரஸ் முந்தைய கொரோனா வைரசுகளைவிட 10 மடங்கு அதிவேகமாக பரவும் ஆற்றல் கொண்டது. இந்த வகையான வைரஸ், குஜராத்தில் ஒருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் எக்ஸ்-இ வைரஸ் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர் பற்றிய வேறு எந்த தகவல்களும் வெளியாகவில்லை.