ஒவ்வொரு மாத பவுர்ணமி நாட்களிலும் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. வரும் 15, 16ம் தேதிகளில் நடைபெற இருக்கும் சித்ரா பவுர்ணமி வழிபாட்டுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.