காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுவீரப்பட்டு ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற இந்த கிராமசபை கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கலந்துகொண்டார். தொடர்ந்து, கிராமசபை கூட்டம் நடைபெறுவதை பார்வையிட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த தலைமைச் செயலாளர் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். மேலும், நடுவீரப்பட்டு ஊராட்சியில் அரசின் திட்டங்கள் குறித்த தீர்மானங்கள் பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டன. இந்த கிராமசபை கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.