அண்மையில் வெளியாகி மிகுந்த சர்ச்சைக்கு உள்ளான திரைப்படம் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. அந்தபடம், ஏற்படுத்திய தாக்கம் குறைவதற்குள் தனது அடுத்த திரைப்படம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி. தனது புதிய படத்தின் அறிவிப்பு குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விவேக் அக்னிஹோத்ரி டெல்லி ஃபைல்ஸ் என நாசூக்காக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பார்த்த அனைத்து மக்களுக்கும் நன்றி கூறியதுடன் கடந்த 4 ஆண்டுகளாக நேர்மையாகவும் கடுமையாகவும் உழைத்து இந்தபடத்தை உருவாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இனப்படுகொலை மற்றும் காஷ்மீர் இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து அனைத்து தரப்பு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியமாக கருதியே இந்ததிரைப்படத்தை வெளியிட்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து புதிய திரைப்படத்தை உருவாக்கும் நேரம் இது என்று தனது அடுத்த திரைப்பட உருவாக்கம் குறித்து குறிப்பிட்டுள்ள அவர் கூடவே டெல்லி ஃபைல்ஸ் என்ற வார்த்தையை சுட்டியுள்ளார். இதன் மூலம் விவேக் அக்னிஹோத்ரியின் அடுத்த படத்தின் பெயர் டெல்லி ஃபைல்ஸ் ஆக இருக்கலாம் என்று நாசூக்காக குறிப்பிட்டுள்ளதாக திரைத்துறையினர் கருதுகின்றனர்.