திருவள்ளூர் மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்தால் கூட அரசு அதிகரிகள் வேலை செய்வதில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பணம் கொடுத்தாலும் வேலை செய்து தர மாட்டீர்களா என மக்கள் கேட்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம் குறித்து லஞ்ச லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை இயக்குநர் கண்காணித்து நடவடிக்கை எடுப்பாரா என்று மக்கள் காத்திருக்கின்றனர்.