பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த கோரி நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பில் பாத யாத்திரை நிகழ்ச்சி இன்று கோவையில் தொடங்கிவைக்கப்பட்டது. இதில் பேசிய கே.எஸ்.அழகிரி, ‘மத்திய மந்திரி அமித்ஷா மீண்டும் இந்தி திணிப்பை ஏற்படுத்த நினைக்கிறார். இந்தியாவை சிதறவைக்கும் நோக்கில் அமித்ஷாவின் பேச்சு இருக்கிறது. காங்கிரஸ் எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. மக்கள் விரும்பும் மொழிகளை அவர்கள் பேசலாம்’ என்றார்.