2022-2023ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் முக்கிய அறிவிப்பாக, ஒவ்வொரு கவுன்சிலருக்கும் ரூ.35 லட்சம் வீதம் 200 வார்டுகளுக்கும் மொத்தம் ரூ.70 கோடி வார்டு மேம்பாட்டு திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புராதன கட்டடமான ரிப்பன் மாளிகையை நிறம் மாறும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்க ரூ.1.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.