மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கு பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக, கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதுபோல், மாசி வீதிகளில் 23 இடங்களில் உயர்கோபுரங்கள் மூலம் கண்காணிப்பு, 20 இடங்களில் எல்.இ.டி.டி.வி. அமைக்கப்படுகிறது. தொடர்ந்து இந்தாண்டு புதுமையாக செல்போன் செயலி ஒன்றும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதில் அழகர் செல்லும் பாதை, மண்டகபடி இருக்கும் இடங்கள் பற்றியும், தேர் திருவிழா, திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளில் எங்கு வாகனங்களை நிறுத்தலாம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்று இருக்கும் எனக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.