ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம், கண்ணகியின் சிறப்பைக் கூறுவதாகும். தவறான தீர்ப்பால் மதுரையை எரித்த கண்ணகி, இறுதியில் வைகைக் கரையோரமாகச் சென்றதாகவும், அவரை திருமணம் செய்துகொண்டு கோவலன்
விண்ணுலகுக்குச் சென்றதாகவும் வரலாறு குறிப்பிடுகிறது. கண்ணகியின் சிறப்பை உணர்ந்த சேரன் செங்குட்டுவன், அவருக்கு இமயத்தில் இருந்து கல்கொண்டு வந்து கோயில் கட்டி வணங்கினார். அந்தக் கோயிலானது தமிழக மற்றும் கேரள எல்லையில், வனப்பகுதியில் (தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்) உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்ரா பெளர்ணமியன்று முழு நிலவு விழா கொண்டாடப்படும். சித்ரா பெளர்ணமியானது நாளை கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு அதற்கு கிடைத்திருக்கிறது. இதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.