கேரளாவில் கம்பின் உதவியுடன் நடக்க வேண்டிய 78 வயதான பாட்டி களரி கலையில் அசத்தி வருகிறார்.
கேரளாவில் வசித்து வரும் அந்த பாட்டியின் பெயர் மீனாட்சி அம்மா. பாரம்பரிய களரி கலையை அதன் தொன்மை மறையாமல் பெண்களுக்கு கற்று தந்து வருகிறார். கொம்பின் துணை கொண்டு நடக்க வேண்டிய வயதில் சிறிதும் அச்சமின்றி களரி கலையில் பலவித வித்தைகளை செய்கிறார். இந்தக் கலை குறித்துப் பேசிய மீனாட்சி அம்மா “நான் எழு வயதாக இருக்கும் போது இந்த கலையை கற்றுக் கொண்டேன். தற்போது எனக்கு 78 வயது ஆகிறது. கடத்தநாடு களரி சங்கம் பள்ளியை மறைந்த எனது கணவர் தோற்றுவித்தார்.அவர் தோற்றுவித்த அந்தப் பள்ளியில் தற்போது களரி கலையை மாணவிகளுக்கு கற்று தருவதோடு மேலும் உள்ள கலைகளை நானும் கற்று வருகிறேன்.
அன்றாட செய்திதாள்களை எடுத்து படித்தாலே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அதிகமாக பார்க்க முடிகிறது. பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றால், இது போன்ற தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும். களரி கலை கற்று பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பலத்தையும் தன்னம்பிக்கையை பெறுவார்கள் என்கிறார் அந்த மீனாட்சி பாட்டி. யோகா மற்றும் நடனம் போன்றே மிகவும் மூவாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது களரி கலை. இந்த கலைக்கு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மீண்டும் புத்துயிர் பெற்றது. களரி கலையை கற்பிக்கும் இந்த மீனாட்சி பாட்டிக்கு மத்திய அரசு தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது. களரிபயட்டு கலையில் இரண்டு பிரிவு உண்டு ஒன்று அமைதியை போதிக்கவும் மற்றொன்று போரை காலைத்தை போதிக்கவும் செய்வது குறிப்பிடத்தக்கது.