டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சோனியா காந்தி, ‘காங்கிரஸ் அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் ஒற்றுமை இல்லை. ஒற்றுமை முக்கியமானது. அதற்குத் தேவையான அனைத்தையும் செய்ய நான் உறுதியாக இருக்கிறேன். அதே நேரத்தில் முன்பு எப்போதையும்விட காங்கிரஸ் கட்சிக்கு முன்னோக்கிச் செல்லும் பாதை மிகவும் சவாலானது. கட்சித் தொண்டர்களின் மனஉறுதிக்கும் கடுமையான சோதனை இருக்கிறது. காங்கிரசின் மறுமலர்ச்சி நமக்கு மட்டும் முக்கியமான விஷயமல்ல. நமது ஜனநாயகம் மற்றும் சமூகத்திற்கும் அவசியமாகும்’ என்றார்.