கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பிடி காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் தனது வீடுகளை இளைஞர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அதில் இருக்கும் ஓர் வீட்டில் பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் திருநெல்வேலியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞர் தங்கியுள்ளார். சிவாக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் என்பதால் திருநெல்வேலியைச் சேர்ந்த இவரது நண்பர்களான 5 பேர் கோவையில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளனர். இவர்கள் இரவு முழுவதும் மதுஅருந்தி, கஞ்சா புகைத்தும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கத்தியை பயன்படுத்தப்பட்டதை பார்த்த வீட்டின் உரிமையாளர் சண்முகசுந்தரம் கண்டித்துள்ளார். இதனையடுத்து, நேற்று காலை சிவா திருநெல்வேலிக்கு சென்றநிலையில் போதை மயக்கத்திலிருந்த அவரது நண்பர்கள் 5 பேரும் மீண்டும் மதியம் 2 மணியளவில் அரிவாள், கத்தி கம்புகளுடன் வீட்டின் உரிமையாளர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா மீது தாக்குதல் நடுத்தி படுகாயமடைய செய்துள்ளனர். சம்பவத்தை தடுக்க முயன்ற பக்கத்து வீட்டுகாரர், சாலையில் சென்று கொண்டு இருந்த பொதுமக்கள், முன்னால் கவுன்சிலர் என 8 பேர் பேரை போதை தலைக்கு ஏறி அரிவாளால் வெட்டி தாக்தலில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் போதை இளைஞர்களை தடுத்தவர்களின் வீடு வாகனங்களையும் நொறுக்கிவிட்டு அருகில் உள்ள தென்னந்தோப்பில் பதுங்கிக்கொண்டனர். இதனையடுத்து இவர்களை 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உதவியுடன் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் தென்னந்தோப்பில் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்தபகுதியில் பெரும்பரப்பரப்பு ஏற்பட்டதுடன் போதை இளைஞர்கள் தாக்குதலில் 8 பேரும், பொதுமக்கள் தாக்குதலால் படுகாயமடைந்த 5 போதை இளைஞர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.