திண்டுக்கல்லில் ம.தி.மு.க. மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய துரை வைகோ, ‘இலங்கையில் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு ஒரு மில்லியன் அளவுக்கு நிதி வழங்கியுள்ளது. இதில் தவறு கிடையாது. ஆனால், இலங்கையில் வாழக்கூடிய தமிழர்கள் கடந்த 40 நாட்களாக சந்தித்துவரும் பிரச்சினைகள், கச்சத்தீவு பிரச்சினை, ராமேஸ்வரத்தில் இருந்து கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை ராணுவம் கைதுசெய்தது போன்ற பிரச்சினைகளை நிதி வழங்கும்போது பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாண வேண்டும். இது மத்திய அரசின் முக்கியக் கடமையாகும்’ எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.