ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் சுந்தரேசன் தலைமையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைப்பெற்றது. இந்த தர்ணா போராட்டத்தில், பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமுல்படுத்தி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்க வேண்டும், மருத்துவ செலவுக்காக ஓய்வூதியர்களிடம் பெறப்பட்ட தொகையை உடனடியாக திருப்பி அளிக்க வேண்டும் மேலும் கூடுதல் ஓய்வூதியம் பெருவோரின் வயதுவரம்பை 80 வயதிலிருந்து 70 வயதாக குறைத்து 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திரளான ஓய்வூதியர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.