கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களே மாற்றி அமைத்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர் விலையை இன்று எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளது. அதன்படி, 14.2 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.3 உயர்ந்து ரூ.1018.50 காசுகளாக இன்று முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. அதேபோல, 19 கிலோகிராம் வணிக சிலிண்டர் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2.507க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் சமையல் சிலிண்டர் ரூ.1,015க்கும் வணிக சிலிண்டர் ரூ.2,499க்கும் விற்பனையாகி வந்த நிலையில், இன்று இரண்டாவது முறையாக சிலிண்டர் விலை உயர்ந்து இருப்பதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.